6 நாடுகளுக்கு பயணத் தடை: டிரம்ப்பின் செயலுக்கு பின்னடைவு

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், 6 முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவில் வசிப்பவர்களின் தாத்தா, பாட்டி மற்றும் உறவினர் களுக்கும் அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப் பட்டுள்ளது. ஹவாயியில் உள்ள மாவட்ட நீதிபதி ஒருவர் இந்த உத்தரவை பிறப்பித்தார். இது குடியேறிகள் மற்றும் அகதிகள் அமெரிக் காவுக்குள் நுழைய திரு டிரம்ப் எடுத்து வரும் நடவடிக்கை களுக்கு பெருத்த பின்னடை வாகக் கருதப்படுகிறது. சில திருத்தங்களுக்குப் பிறகு திரு டிரம்ப் அறிவித்த பயணத் தடை சென்ற மாதம் நடப்புக்கு வந்தது. அமெரிக்காவில் வசிப்பவர்களின் மிக நெருங்கிய உறுவனர்கள் மட்டுமே அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி வழங்கப் பட்டிருந்தது. தாத்தா, பாட்டி, பேரக் குழந்தைகள், மைத்துனர்,

மாமா போன்ற உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மற்ற உறவினர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா, ஏமன் ஆகிய 6 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு திரு டிரம்ப் தடை விதித்துள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon