கனமழையால் வெள்ளம், மரங்கள் சாய்ந்தன

சிங்கப்பூரின் பல பகுதிகளில் நேற்றுப் பெய்த கன மழை காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன் மரங்களும் வேரோடு சரிந்தன. இதனால் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டது. நியூட்டனை நோக்கிச் செல்லும் அப்பர் தாம்சன் சாலை யில் மரம் விழுந்ததால், தாகூர் டிரைவுக்கு அப்பால் அப்பர் தாம்சன் சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டதாக நிலப் போக்கு வரத்து ஆணையம் 12.46க்கு டுவீட் செய்தது. மரம் விழுந்ததால் அப்பர் சிராங்கூன் சாலையில் செல்லும் 167, 169, 980 ஆகிய பேருந்துகள் பாதை மாற்றப்பட்டது எஸ்எல்ஈ வழியாக இயோ சூ காங் சாலைக்குக்குச் செல்லும் என்று எஸ்எம்ஆர்டி செயலி பிற் பகல் 1.28 மணிக்கு தெரிவித்தது.

உட்லண்ட்ஸ் ஸ்திரீட் 13லும் மரம் விழுந்ததால் அச்சாலை போக்குவரத்துக்கு மூடப்பட்டது. அச்சாலை வழியாகச் செல்லும் பேருந்து சேவை 911ம் பாதை மாற்றப்பட்டது. இரு மரங்களும் ஒரு மணி நேரத்துக்குள்ளாகவே அகற்றப்பட்டு, போக்குவரத்து சீராக்கப்பட்டது. தெம்பனிஸ் சாலையில் 10 நிமிடங்களுக்கும் கஸ்கெடன் சாலை, டோம்லிம்சன் சாலை களில் 30 நிமிடங்களுக்கும் நேற்று வெள்ளம் நீடித்தது. அடுத்த மூன்று நாட்களுக்கு பிற்பகலில் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon