கமல்ஹாசனுக்கு எதிராகப் போராட்டம், போலிஸ் குவிப்பு

சென்னை: தமிழகத்தில் தொலைக் காட்சி ஒன்றில் ‘பிக் பாஸ்’ என்ற நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிகழ்ச்சிக்காக நடிகர், நடிகையர் 15 பேர் ஒரே வீட்டில் தங்க வைக்கப்பட்டு அவர்கள் சக மனிதர்களுடன் பழகும் விதம் விமர்சனங்களை எப்படி எதிர் கொள்கின்றனர் மற்றும் சகிப்புத் தன்மை குறித்து கேமராவில் பதிவு செய்து தினமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், “இந்நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள நடிகையர் ஆபாச மாக உடை அணிந்துள்ளனர். சமூக சீர்கேட்டுக்கு வழி வகுக்கும் இந்நிகழ்ச்சியை தடை செய்யவேண் டும்.

நடிகர், நடிகையர் மற்றும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங் கும் கமல்ஹாசனையும் கைது செய்ய வேண்டும்,” என கடந்த புதன்கிழமை சென்னை போலிஸ் ஆணையாளர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் புகார் அளித்தனர். தொடர்ந்து தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கூட்டமைப்பு என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களும் நேற்று முன்தினம் போலிஸ் ஆணையாளரிடம் புகார் அளித் தனர். “பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங் கேற்றுள்ள நடிகை காயத்ரி ரகுராம் மற்றொரு நடிகையான ஓவியாவின் நடவடிக்கைகளை பார்த்து, ‘சேரி பிகேவியர்’போல் இருப்பதாகக் கூறியுள்ளார். ஒருதரப்பு மக்களை இழிவு படுத்தும் வகையில் அவர் பேசியது கண்டிக்கத்தக்கது; சட்டப்படி குற்றம். அதனால், காயத்ரி ரகுராம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்களது புகார் மனுவில் தெரிவித்தனர்.

“காயத்திரி ரகுராமின் பேச்சை ஒளிபரப்பிய தனியார் தொலைக் காட்சி நிர்வாகிகள் மன்னிப்புக் கேட்க வேண்டும். “அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் வேறு எந்த தொலைக் காட்சியும் இது போன்ற செயல்களில் ஈடுபடாத வாறு பாதுகாக்க வேண்டும்,” என்றும் புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் வீட்டின் முன்னால் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்திய தாக இந்து அதிரடிப் படையினர் அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். கமல் நடத்தும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் பெண்கள் பற்றி இழிவாகப் பேசப்படுவதாகவும் தமிழ் கலாசாரம் சீரழிக்கப்படுவ தாகவும் தெரிவித்த அந்த அமைப்பினர் அதற்காக கமல்ஹாசனுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். கமலுக்கு எதிராகவும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு எதிராகவும் அவர்கள் முழக்கம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை எல் டாம்ஸ் சாலையிலுள்ள கமல் ஹாசன் வீட்டின் முன் ஏராளமான போலிசார் குவிக்கப்பட்டனர். அந்த வீட்டுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.