சுடச் சுடச் செய்திகள்

பூமிக்குள் ரகசிய அறையில் ஒன்பது சாமி சிலைகள்

தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே நாவக் குறிச்சி கிராமத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத நைன பூரண நாராயண பெருமாள் கோவில் உள்ளது. கிராம மக்கள் சார்பில் கோவில் வளாகத்தில் ஆஞ்சநேயர் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று முன்தினம் காலை 8.30 மணிக்கு கிராம மக்கள் குழிதோண்டியபோது திடீரென அதில் பள்ளம் ஏற்பட்டது. அந்த பள்ளத்திற்குள் சாமி சிலைகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.

அங்கு சுமார் ஐந்தடி ஆழ குழிக்குள் ரகசிய அறை இருந் தது. அதில் 9 சாமி சிலைகளைக் கண்டெடுத்தனர். அவை 2¼ அடி உயர ஸ்ரீதேவி, பூதேவி சமேத நைன பூரண நாரா யணப் பெருமாள் சிலைகளும் ஓரடி உயர கருடாழ்வார், திருமங்கையாழ்வார், சக்கரத்தாழ்வார், நின்ற பெருமாள், அமர்ந்த பெருமாள் சிலைகளும் ½ அடி உயர பத்மாசன மகா லட்சுமி சிலைகள் என மொத்தம் 9 சிலைகள் இருந்தன. உலோகத்தாலான இந்த சிலைகளை குழியிலிருந்து வெளியே எடுத்தபோது பொதுமக்கள் திரண்டு வந்து பக்தியுடன் பார்த் தனர். கோவிலில் வைக்கப்பட்டிருந்த அந்த சிலைகளுக்கு பால், சந்தனம், பன்னீர் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon