சுடச் சுடச் செய்திகள்

காவல்துறை அதிகாரி வீட்டில் 70 சவரன் நகை கொள்ளை

சென்னை: ஆவடி அடுத்த திரு முல்லைவாயல் சத்தியமூர்த்தி நக ரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை யினரின் குடியிருப்பில் வசிப்பவர் மாரிமுத்து (32). இவர், வண்டலூர் அருகே ஊனமாஞ்சேரியில் உள்ள காவல்துறை பயிற்சிக் கழகத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது வீட்டில் மதுரை, அங்கயற்கண்ணி 3வது தெருவைச் சேர்ந்த உறவினர் பெண் சத்யா (26) தங்கியுள்ளார். இவர், நந்தனத்தில் உள்ள தனியார் ஐஏஎஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். கடந்த 11ஆம் தேதி மாரிமுத்து பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில் சத்யா தனியாக இருந்துள்ளார். அப்போது, மாரிமுத்துவின் சொந்த ஊரான நெல்லை மாவட் டம், சங்கரன்கோவில் இளையான் குளம் கிராமத்தைச் சேர்ந்த அவ ரது தம்பி முத்துகுமார் (24) ஊரி லிருந்து வந்துள்ளார். அப்போது சத்யா குளித்துக் கொண்டிருந்ததால் முத்துகுமார் வீட்டில் காத்திருந்தார். பின்னர் சத்யா வந்ததும் அண்ணனைப் பற்றி முத்துகுமார் விசாரித்துள் ளார். மாரிமுத்து பணியில் இருப் பதாக சத்யா கூறியுள்ளார்.

இதையடுத்து, சிறிது நேரம் வீட்டிலிருந்த முத்துகுமார் சொந்த ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட் டார். அவர் சென்றதும் சத்யா தமது அறைக்குச் சென்றபோது அங்கு அலமாரியில் வைத்திருந்த 70 சவரன் தங்க நகைகள், 2 கைபேசி கள் மற்றும் ஐபேட் ஆகியவை மாயமானதைக் கண்டு அதிர்ச்சிய டைந்தார். இதுகுறித்து திருமுல்லை வாயல் போலிசில் சத்யா புகார் செய்தார். அதில் “நான் குளித்துக் கொண்டு இருக்கும்போது முத்து குமார் எனது நகை மற்றும் பொருட்களை திருடிக்கொண்டு வீட்டில் இருந்து தப்பிச் சென்று விட்டார்,” என்று கூறியிருந்தார். இதையடுத்து ஆய்வாளர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். மேலும், முத்துகுமாரைப் பிடிக்க சங்கரன் கோவிலுக்கு தனிப்படை போலி சார் விரைந்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon