தினகரன் விடுதலை ஆகக்கூடும்

சென்னை: இரட்டை இலைச் சின் னத்துக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கிலிருந்து டிடிவி தினகரன் விடுவிக்கப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. இரட்டை இலைச் சின்னத்தைப் பெற அப்போதைய அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டார். லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் உள்ளிட்டோரை கடந்த ஏப்ரல் மாதம் டெல்லி போலி சார் கைது செய்து, திகார் சிறையில் அடைத்தனர்.

ஜூன் 1ஆம் தேதி அவருக்கு பிணை கிடைத்தது. இந்நிலையில் இரட்டை இலை பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் டெல்லி போலிஸ், தீஸ்ஹசாரி மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் இடைத்தரகர் சுகேஷ் சந்திர சேகர் பெயர் மட்டும்தான் இடம் பெற்றுள்ளதாம். டிடிவி தினகரனின் பெயர் இதில் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக் கப்படுகிறது. இதனால் தினகரன் இவ்வழக்கி லிருந்து விடுவிக்கப்படலாம் என்று ஆருடம் கூறப்படுகிறது. இதைய டுத்து டெல்லி போலிஸ், ‘வழக்கில் தொடர்புடைய மற்ற 4 பேர் மீது விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்’ என்று கூறியுள்ளது.

 

தினகரன் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப் பட்டு திகார் சிறையில் அடைக்கப் பட்டார். கோப்புப் படம்