பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப்புக்கு பிணை மறுப்பு

திருவனந்தபுரம்: பாவனா கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள திலீப் பிணை கோரிய மனுவைத் தள்ளு- படி செய்த கேரளாவின் அங்கமாலி நீதிமன்றம் அவரை மேலும் ஒரு நாள் போலிஸ் காவலில் வைத்து விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்- ளது. நடிகை பாவனாவை கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்- கிய வழக்கில் நடிகர் திலீப்பை ஆலுவா காவல்துறையினர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். இதைத்தொடர்ந்து திலீப் பிணை கோரி மனுத்தாக்கல் செய்- தார்.

இந்நிலையில் கடந்த புதன்- கிழமை திலீப்பை அங்கமாலி நீதி- மன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவல் துறையினர் அவருக்குப் பிணை வழங்க எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும் திலீப்பை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி கோரினர். ஆனால் நீதிமன்றம் இரண்டு நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கி- யது. இதையடுத்துத் திலீப்பிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். திரிச்சூர், எர்ணாக் குளம் உள்ளிட்ட இடங்களுக்கும் திலீப்பை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். திலீப்பிடம் நடத்தப்பட்ட விசார- ணையில் பல திடுக்கிடும் உண்- மைகள் தெரியவந்ததாக காவல்- துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் திலீப்புக்கு அளிக்கப்பட்ட காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கக் கொடுத்த கெடு வியாழக்கிழமை காலை 11 மணியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்- தப்பட்டார். அப்போது அவருக்குப் பிணை வழங்க காவல்துறை சார்- பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. மேலும் திலீப்பிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளதாக கூறியுள்ள காவல்துறை, திலீப்பின் காவலை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து திலீப்பை மேலும் ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.

நீதிமன்ற விசாரணைக்குப் பின் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறார் நடிகர் திலீப். படம்: ஊடகம்