சுடச் சுடச் செய்திகள்

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்

எட்டு ஆண்டுகளாக அறிவிக்கப்படாமல் இருந்த தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் திரைப்படங்களுக்கான மாநில அரசின் விருதுகள் ஆண்டுதோறும் அறிவிக்கப்படும். ஆனால், கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து இந்த விருதுகள் அறிவிக்கப்படாமலேயே இருந்தது. இந்நிலையில், 2009–2014ஆம் ஆண்டு வரை வெளி வந்த படங்களில் சிறந்த படங்கள், நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

வாகை சூடவா, தெய்வத் திருமகள், உச்சி தனை முகர்தல், வழக்கு எண் 18/9, சாட்டை, தங்கமீன்கள், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்கள் விருது பெறுகின்றன. விக்ரம், ஆர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிவகார்த்திகேயன், அமலாபால், நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோ ருக்குச் சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல் 2009 முதல் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்த் தொலைக்காட்சி களில் வெளியான நெடுந்தொடர்கள், அதில் நடித்தவர்கள், தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் தமிழக அரசு விருதுகளை அறிவித்துள்ளது. திருமதி செல்வம், வசந்தம், உறவுக்குக் கைகொடுப்போம், தென் றல், நாதசுவரம், சாந்தி நிலையம், வாணி ராணி, தெய்வ மகள் உள் ளிட்டவை சிறந்த நெடுந்தொட ருக்கான விருது பெறுகின்றன.

2014ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் சிறந்த நடிகை விருது பெற்ற ‘காக்கா முட்டை’ படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon