சம்பளத்தைக் குறைத்த ஏமி

வெளிநாட்டில் இருந்து வந்தாலும் இந்தியாவில் இந்தி, தமிழ்த் திரைப் படங்களில் நடித்துவிட்டார் ஏமி ஜாக்சன். ஆனால், தமிழ்ப்பட இயக்கு நர்கள் தொடர்ந்து அவரை வைத் துப் படம் எடுக்க முன்வராததால், அவர் குறைந்த சம்பளத்திற்கு கன்னடப் படம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். ரஜினியுடன் ஏமி நடிக்கும் 2.0 படத்திற்குப் பிறகு தென்னிந்திய மொழிப் படங்களில் நடிப்பதையே கனவாக கொண்டிருந்த அவர், தமிழ்ப் படங்களில் கூடுதல் கவனம் செலுத்தவே சென்னையில் வீடு வாங்கினார்.

ஆனால், இன்னமும் பீட்டா ஆதரவாளராக ஏமி காட்டிக்கொள் வதும் பாலிவுட் நடிகையைவிட அதிகமாக அலட்டிக்கொள்வதும் தான் தமிழில் அவருக்கு வாய்ப்புக் குறைய காரணம். ஷங்கர் இயக்கத்தில் நடிக்க பல நடிகைகள் ஏங்கும்போது ஏமி அவருடன் இரண்டு படங்களில் பணியாற்றிவிட்டார். ஆனால் தேவையில்லாத விஷயங்களைச் செய்து ஷங்கரை கடுப்பேற்றி உள்ளார். ஜல்லிக்கட்டுப் போராட்டம் தமிழகத்தில் தீவிரம் அடைந்த போது தமிழர்களின் கோபப் பார்வை பீட்டா அமைப்பின் உறுப்பி னரான ஏமி பக்கம் திரும்பியது.

பீட்டாவை விட்டுவிடுமாறு ஷங்கர் கூறியும் ஏமி கேட்கவில்லை. பீட்டா அமைப்பை விட்டு விலக மறுத்த ஏமி அண்மையில் அந்த அமைப்புக்காக புகைப்படத்திற்குக் காட்சி கொடுத்துள்ளார். 2.0 படம் வரும்போது பார்த்துக் கொள்கிறோம் என்று சிலர் கூறி வருவது ஷங்கரை கவலை அடைய வைத்து உள்ளது. மேலும் சல்மான் கான் மூலமாக இந்திப் பட வாய்ப்புகளுக்காக செய்த முயற்சிகளும் பலனளிக் காத நிலையில், மிகக் குறைவான சம்பளத்திற்கு கன்னடப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஏமி. இதற்கிடையே ஏமியின் இந்த முடிவு பற்றி கேள்விப்பட்ட சில கோலிவுட் நடிகைகள், “அந்தச் சம்பளத்துக்கு நாங்கள் எல்லாம் நடிக்கமாட்டோம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon