ஆப்கான் தாக்குதலில் ஐஎஸ் தலைவன் பலி

வா‌ஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் இந்த வாரம் குண்டுகளை வீசித் தாக்கியதில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் ஆப்கானிஸ்தான் பிரிவு தலைவராக செயல்பட்டுவந்த அபு சயத் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகம் தெரிவித்தது. ஈராக் மற்றும் சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐஎஸ் இயக்கத்தினர் உலகம் எங்கும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். ஐஎஸ் இயக் கத்தை துடைத்தொழிக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படையினர் கடந்த 5 ஆண்டுகளாக ஈடுபட்டு வரு கின்றனர். ஈராக்கில் ஐஎஸ் வசமிருந்த பெரும்பாலான நகரங் களை அரசாங்கப் படையினர் மீட்டு விட்டனர். அதே போல சிரியாவிலும் ஐஎஸ் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை அரசாங்கப் படை யினரிடம் இழந்துள்ளனர். இதனால் ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் குழுவினர் வலுவிழந்த நிலையில் உள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ் தானில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மேற் கொண்ட தாக்குதலில் அபு சயத் கொல்லப்பட்டதாக அமெரிக்க தற்காப்பு அமைச்சு தெரிவித் துள்ளது.

இதற்கு முன்னதாக ஆப்கானில் ஐஎஸ் தலைவர் களாக இருந்த அப்துல் ஹாசிப் மற்றும் ஹபீஸ் சயத் கான் ஆகியோரும் அரசாங்கப் படை யினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஆப்கானுக்கு 4,000 அமெரிக்க வீரர்களை அனுப்ப அமெரிக்க தற்காப்பு அமைச்சருக்கு வெள்ளை மாளிகை அதிகாரம் வழங்கியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon