துருக்கியில் 7,500 அதிகாரிகள் பணி நீக்கம்

இஸ்தான்புல்: துருக்கியில் ஓராண்டுக்கு முன்பு இதே ஜூலை மாதம் 15ஆம் தேதிதான் ஆட்சியைக் கவிழ்க்க ராணுவப் புரட்சியில் சிலர் ஈடுபட்டனர். ஆனால் துருக்கிய அதிபர் தாயிப் எர்டோகன் அப்புரட்சி முயற்சியை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கினார். புரட்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராணுவ உயர் அதிகாரிகள், போலிஸ் அதிகாரி கள், ராணுவ வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் உடனடி யாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

அத்துடன் இன்னும் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் ராணுவப் புரட்சி ஒடுக்கப்பட்டு ஓராண்டு நிறைவு பெறுவதை முன்னிட்டு அங்கு நேற்று பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அதற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை போலிசார், ராணுவ வீரர்கள், அதிகாரிகள் என சுமார் 7,000 பேரை அரசாங்கம் பணியிலிருந்து நீக்கியது. இந்த ஓராண்டில் இதுவரை 50,000 பேர் கைது செய்யப்பட்டனர். சுமார் 150,000 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆகக் கடைசியாக தற்போது 7,500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். துருக்கியில் ஏற்பட்ட ராணுவப் புரட்சிக்கு அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்லாமிய சமய போதகர் ஃபெதுல்லா குலனே காரணம் என்று துருக்கிய அரசாங்கம் கூறி வருகிறது. ஆனால் அந்த புரட்சி முயற்சியில் தனக்கு எந்த சம்பந்த மும் இல்லை என்று திரு குலன் கூறியுள்ளார். அவர் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

போலிசுக்கு ஆதரவாகப் பேரணியில் ஈடுபட்ட ஹாங்காங் மக்கள்மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசினர். படம்: ராய்ட்டர்ஸ்

16 Nov 2019

ஹாங்காங்கில் போலிசுக்கு ஆதரவாக பேரணி

தன் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பிய கிரேக், வேறு வழியின்றி முதலையின் கண்ணுக்குள் விரலைவிட்டு ஆட்டி, அதன் கவனத்தை திசைதிருப்ப வேண்டியதாயிற்று. படம்: அன்ஸ்பிளாஷ்

16 Nov 2019

முதலையின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியவர்