சுடச் சுடச் செய்திகள்

தடையற்ற வர்த்தக உடன்பாடு: 11 நாடுகள் பேச்சுவார்த்தை

தோக்கியோ: டிபிபி என்படும் பசிபிக் நாடுகளுக்கு இடை யிலான தடையற்ற வர்த்தக உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகிக்கொண்டதை அடுத்து மற்ற 11 நாடுகள் அது தொடர் பான பேச்சை மீண்டும் தொடங்கி யுள்ளன. அந்த உடன்பாடு நிலைத்திருக்க விரும்புவதாக அந்த 11 நாடுகளும் தெரிவித் துள்ளன. தோக்கியோவில் உள்ள உல்லாசத்தல நகரில் ஜப்பான் தலைமையில் நேற்று தடையற்ற வர்த்தகம் தொடர்பான பேச்சு வார்த்தை நடந்தது. தடையற்ற வர்த்தகம் தொடர்பில் புதிய உடன்பாடு காண வேண்டும் என்று ஜப்பானிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இருப்பினும் புதிய உடன்பாடு காண்பது தொடர்பில் ஒருமித்த இணக்கம் தேவை என்று ஜப்பானிய உயர் அதிகாரி ஒருவர் கூறினார். ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், வியட்னாம் உள்ளிட்ட 11 நாடுகள் டிபிபி உடன்பாட்டில் கையெழுத்திட் டுள்ளன. திரு டிரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் அந்த உடன்பாட்டி லிருந்து விலகுவதாக அறி வித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon