லியு ஸியாபோவின் உடல் தகனம்; மனைவி விடுதலை

பெய்ஜிங்: கல்லீரல் புற்றுநோய் காரணமாக வியாழக்கிழமை மரணம் அடைந்த மனித உரிமை ஆர்வலர் திரு லியு ஸியாபோவின் உடல் “உள்ளூர் பழக்க வழக்கப்படியும், குடும்பத்தினரின் விருப்பப்படியும்” நேற்று தகனம் செய்யப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஷென்யாங்கில் நடந்த இறுதிச் சடங்கில், அவருடைய மனைவி லியு ஸியாவும் உறவினர்களும் கலந்து கொண்டார். இந்நிலையில் லியு ஸியா விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரி ஒருவர் தெரி வித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு அவரது கணவர் லியு ஸியாபோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது முதல் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் ஒரு மாதத்திற்கு ஒரு முறை சிறையில் இருந்த அவரது கணவரைப் பார்க்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அவரது கணவரின் மறைவு அவருக்கு ஆழ்ந்த துக்கத்தைக் கொடுத்திருப்பதாகக் கூறப்படு கிறது. இதற்கிடையே அவர் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக அரசாங்க அதிகாரி ஓருவர் தெரி வித்திருப்பதை ஸியாவின் வழக்கறிஞர் ஜரெட் கென்சர் மறுத் திருக்கிறார்.

லியு ஸியாவின் கணவர் இறந்ததிலிருந்து அவர் தனிமையான ஓரிடத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார். “லியு ஸியாவை மீட்பதற்காக இந்த உலகமே உடனடியாக ஒன்றுதிரள வேண்டியுள்ளது” என்று அவர் தன்னுடைய அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். லியு ஸியா பற்றி ஆழ்ந்த கவலை அடைவதாகவும், சீன அரசாங்கம் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் நோபல் பரிசுக் குழு வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண் டது.

லியு ஸியாபோவின் இறுதிச் சடங்கின்போது அவரது மனைவி லியு ஸியா தன் கணவரின் புகைப்பபடத்தை கையில் வைத்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon