ஆளுநர் மாளிகையில் வையார் சிலை: ஆத்திசூடி ஒலிக்கும்

சென்னை: தமிழக ஆளுநர் மாளி கையில் வையாரின் உருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலையின் கீழே உள்ள கல் வெட்டைத் தொட்டால் வையின் ஆத்திசூடி ஒலிக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடும் செய்யப்பட் டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் தமிழக பொறுப்பு ஆளு நர் வித்யாசாகர் ராவ் இச் சிலையைத் திறந்து வைத்தார். சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஏற்கெனவே திரு வள்ளுவர் சிலை திறந்துவைக்கப் பட்டுள்ளது.

தற்போது வை சிலையும் நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு நிகழ்வில், முதல்வர் பழனிசாமி, தலைமைச் செயலர், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வைச் சிலையில் காணப் படும் சுவடியை ஒருவர் தொட் டால், ஆத்திசூடி அழகாக ஒலிக் கும். இத்தகைய ஏற்பாட்டுடன் தமிழ்ச் சான்றோர்களின் சிலைகள் அமைக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆளுநர் மாளிகையைப் பொது மக்களும் சுற்றிப் பார்க்க அனுமதி அளித்து அண்மையில் ஆளுநர் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.