தஞ்சை அருகே பேருந்து, லாரி மோதல்: பத்து பேர் பலி

தஞ்சை: அரசுப் பேருந்துடன் சிறிய ரக லாரி மோதிய விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது. தஞ்சாவூரில் இருந்து கும்ப கோணம் வரையிலான வழித்தடத் தில் தினந்தோறும் இரவு நேரத்தில் அரசுப் பேருந்து இயக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமையும் வழக்கம் போல் அந்தப் பேருந்து கும்ப கோணம் நோக்கிப் புறப்பட்டது. பேருந்தில் 60 பயணிகள் இருந்த தாகக் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதி அருகே வந்தபோது, அந்தப் பேருந்தின் மீது எதிர்த் திசையில் தஞ்சை நோக்கி வந்த சிறிய ரக லாரி ஒன்று பயங்கர வேகத்தில் மோதியது.

எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த இந்த விபத்தில் சம்பவ இடத்தி லேயே ஆறு பெண்கள் உட்பட பத்து பேர் பலியாகியுள்ளனர். மோதிய வேகத்தில் பேருந்து, லாரியின் ஓட்டுநர்கள் உயிரி ழந்தனர். பேருந்து பயணிகளில் 21 பேர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடினர். விபத்து நிகழ்ந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் பதறியடித்துக் கொண்டு சம்பவ இடத்துக்கு ஓடிவந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். தஞ்சை அரசு மருத்துவமனைக் கும் இலவச ஆம்புலன்ஸ் சேவைப் பிரிவுக்கும் தகவல் கொடுக்கப்பட் டது. விபத்து குறித்து தகவலறிந்த போலிசாரும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட னர். விபத்து நடந்த பகுதியில் தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் ஆய்வு செய்தனர். மேலும், அரசு மருத்துவ மனையில் விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் நேரில் சென்று பார்த்து, ஆறுதல் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon