சாலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி; மக்கள் நூதன போராட்டம்

நெல்லை: அண்மைக்காலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு வித்தியாசமான நூதனப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் சாலை சீரமைக்கப்படாததைக் கண்டித்து சாலைக்கு மலர் வளையம் வைக்கும் வித்தியாசமான போராட்டம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. அங்குள்ள குமரரெட்டியாபுரத் தில் உள்ள முக்கிய சாலை ஒன்று சீரமைக்கப்படவில்லை. இது தொடர்பாக பல ஆண்டுகளாக குமரரெட்டியாபுர கிராம மக்கள் அரசு அதிகாரிகளிடம் தொடர்ந்து முறையிட்டு வந்துள்ளனர். இந்நிலையில் கிராமத்தில் இருந்து பிற பகுதிகளை இணைக் கும் அந்த 9 கிலோமீட்டர் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகி விட்டதால், போக்குவரத்துக்கு உகந்ததாக இல்லை. இதனால் கிராமத்தில் இருந்து வெளியே செல்பவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ள னர்.

இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். நேற்று முன்தினம் முக்கிய சாலையில் கூடிய அப்பகுதி மக் கள், எதற்கும் பயன்படாத சாலை மரணித்துவிட்ட நிலையிலிருப்ப தாகக் கோபத்துடன் தெரிவித் தனர். எனவே சாலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, ஒப்பாரிப் பாடல்களைப் பாடி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் கூறினர். இதன் பின்னர் பெண்கள் கையில் மலர் வளையத்தை ஏந்திய படி சாலையில் அமர்ந்து ஒப்பாரிப் பாடல்களைப் பாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

கோவில்பட்டியில்​ போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் படம்: தகவல் ஊடகம்