அய்யாக்கண்ணு: டெல்லியில் மீண்டும் போராடுவோம்

சென்னை: தங்களது முக்கிய கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவிசாய்க்காத நிலையில் தமிழக விவசாயிகள் அடுத்தகட்ட போராட்டத்தை துவங்கப்போவதாக விவசாயி அய்யாக்கண்ணு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநிலத் தலைவரான அவர், நேற்று முன் தினம் சென்னையில் இருந்து புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசுகையில், தங்களது மனக்குறை களையும் கோரிக்கைகளையும் பிரதமர் மோடியைச் சந்தித்து முறையிட அனுமதி கிடைக்க வில்லை என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

அய்யாக்கண்ணு தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட விவசா யிகள் ரயில் மூலம் டெல்லி சென் றுள்ளனர். அங்கு அவர்கள் இரண்டாம் கட்டப் போராட்டங் களில் ஈடுபட உள்ளனர். “தமிழகத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக விவசாயம் வெகு வாகப் பாதிக்கப்பட்டது. வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் நானூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரை மாய்த்துக் கொண்டனர். இந்த துயரச் செய்தி ஊடகங்களில் பரவலாக வெளிவந்தது.

“எனினும், இது சம்பந்தமாக பிரமரை நேரில் சந்தித்து முறையிட எங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால்தான் நாங்கள் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடத்தினோம்,” என்றார் அய்யாக்கண்ணு. போராட்டத்தின்போது தமிழக முதல்வர் தங்களை நேரில் சந் தித்து பிரச்சினைகளுக்கு நிரந் தரத் தீர்வு காண்பதாக உறுதி யளித்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், இது தொடர்பாக தமிழக அரசு இதுவரை எந்தவித நடவ டிக்கையும் எடுக்கவில்லை எனச் சாடினார். “தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஒவ் வொரு விவசாயிக்கும் தனிநபர் காப்பீடு வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் விரைவில் அமைக்க வேண்டும். “இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாங்கள் தற்போது டெல்லிக்குச் செல்கிறோம்.

அங்கு ஜந்தர் மந்தர் பகுதியில் மீண்டும் கூடி போராட்டம் நடத்த உள்ளோம்,” என்று அய்யாக்கண்ணு மேலும் தெரிவித்தார். கடந்த முறை டெல்லியில் நடந்த தமிழக விவசாயிகளின் அரை நிர்வாணப் போராட்டம் தேசிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. உத்தரபிரதேசம், ராஜஸ் தான் உள்ளிட்ட வடமாநில விவசாயிகளும்கூட இந்தப் போராட்டத்துக்குத் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர் என் பது குறிப்பிடத்தக்கது. இந்நிலை யில் விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருப்பது ஊடகங்கள், மத்திய அரசு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon