கோல்கத்தா குழு பயிற்றுவிப்பாளராக ஷெரிங்ஹம் நியமனம்

கோல்கத்தா: இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியில் போட்டியிடும் அட்லெட்டிக்கோ டி கோல்கத்தா குழுவின் புதிய தலைமைப் பயிற்றுவிப்பாளராக முன்னாள் இங்கிலாந்து, மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர வீரர் டெடி ஷெரிங்ஹம் (படம்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். யுனைடெட், வெஸ்ட் ஹேம், ஸ்பர்ஸ் ஆகிய குழுக்களுக்காக விளையாடியுள்ள ஷெரிங்ஹம் அதன் மூலம் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு கோல்கத்தாவை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்வார் என்று கோல்கத்தா குழு நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்தது. நான்காவது முறையாக நடத்தப்படும் இந்திய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியில் மூன்றாவது வெற்றியாளர் பட்டத்துக்கு கோல்கத்தா குறிவைத்துள்ளது.

முன்னாள் இங்கிலாந்து, மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திர வீரர் டெடி ஷெரிங்ஹம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon