சுடச் சுடச் செய்திகள்

விசாரணை நடத்த ரணதுங்கா வலியுறுத்தல்

கொழும்பு: 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த காணொளி வாயிலாகத் தெரி வித்துள்ளார். அந்த இறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதா னத்தில் நடைபெற்றது. முதலில் பந்தடித்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ஓட்டங்கள் குவித்தது. அதன்பின்னர், பந்தடித்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இலங்கை அணி யின் களக்காப்பிலும் பந்துவீச்சிலும் தொய்வு ஏற்பட்டது. இதனால் இந்திய அணி வெற்றி பெற்றது. “வான்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்டுகள் வித்தி யாசத்தில் தோற்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன்.

“அப்போது நான் இந்தியாவில் ஆட்ட வர்ணனையாளராக இருந் தேன். இலங்கை அணி தோல்வி அடைந்தபோது வேதனைப்பட்டேன். “அத்துடன் எனக்கு சந்தேக மும் எழுந்தது. போட்டியில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தவேண்டும். இறுதிப் போட்டியில் ஃபெடரர், சிலிச் லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆண்களுக்கான பிரிவின் இறுதிப் போட்டிக்கு சுவிட்சர் லாந்தின் ரோஜர் ஃபெடரரும் குரோவே‌ஷியாவின் மரின் சிலிச்சும் தகுதி பெற்றுள்ளனர். முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் சாம் குவேரியுடன் சிலிச் மோதினார். முதல் செட்டை சிலிச் இழந் தாலும் அடுத்தடுத்த செட் ஆட்டங் களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிலிச்சுக்கு சவால் அளித் தாலும் குவேரியால் அடுத்த செட்டுகளை வெல்ல முடியவில்லை. நான்கு செட்டுகள் வரை சென்ற இந்த ஆட்டத்தின் இறுதியில் 6=7, 6=4, 7=6, 7=5 என்ற செட் கணக்கில் சிலிச் வெற்றி பெற்று முதன்முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரரும் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சும் மோதினர். முன்னணி வீரரான ஃபெடர ருக்குக் கடுமையான சவால் அளிக்கும் விதமாக பெர்டிச் விளையாடினார். இருப்பினும், எவ்வளவு போராடியும் அவரால் ஒரு செட்டைக்கூட வெல்ல முடிய வில்லை. முடிவில் 7=6, 7=6, 6=4 என்ற செட் கணக்கில் ஃபெடரர் வென்று 11வது முறையாக விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறி னார். இன்று நடைபெற உள்ள ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஃபெடரர், சிலிச் ஆகியோரிடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர் பார்க்கப்படுறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் கார்பின் முகுருசா ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கா

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon