1/4 கிலோ தங்கத்தை பரிசாக வென்ற முதல் அதிர்ஷ்டசாலி

பிரபல இந்திய நகைக்கடையான ஜோய்ஆலுக்காஸ் நடத்திய அதிர்ஷ்டக் குலுக்கலில் வாடிக் கையாளர் திரு ராஜேஷ் பழனி அண்மையில் வென்றார். கால் கிலோ கிராம் எடையுள்ள தங்கக் கட்டி அவருக்குப் பரிசாகக் கிடைத்தது. இந்த தங்கத்தின் மதிப்பு சுமார் $15,000. இந்தியாவின் மும்பை நகரத் தைச் சேர்ந்த அவர், விடுமுறைக் காக சிங்கப்பூருக்கு வந்திருந்த போது ஜோய்ஆலுக்காஸ் கடை யில் ஆபரணங்களை வாங்கி இந் தப் போட்டியில் கலந்துகொண்டார். குலுக்கலில் வெற்றிபெற்ற தகவல் அறிந்தவுடன் மீண்டும் சிங்கப்பூருக்கு ஜூலை 8ஆம் தேதி வந்து தமது பரிசைப் பெற்றுக்கொண்டார் திரு ராஜேஷ். குறைந்தது $200 மதிக்கத் தக்க ஆபரணங்களை வாங்கும் ஒவ்வொரு வாடிக்கையாளரும் இந்த அதிர்ஷ்டக் குலுக்கலில் கலந்துகொண்டு பரிசை வெல் வதற்கான வாய்ப்பைப் பெறலாம் என்று இந்த நகைக் கடை கூறியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதி அன்று அதிர்ஷ்டக் குலுக் கலில் வென்ற முதல் நபர் தேர்வு செய்யப்பட்டார். சிங்கப்பூரில் மொத்தம் இருவர் இந்தக் குலுக்கலில் வென்று கால் கிலோ கிராம் எடையுள்ள தங்கத்தை தட்டிச் செல்ல வாய்ப்புகள் உள்ளன.

குலுக்கலில் வெற்றிபெற்ற திரு ராஜீவ் பழனி, தனது மனைவியுடன் கால் கிலோ தங்கத்தை ஜோய் ஆலுக்காசின் சிங்கப்பூர் இயக்குநர் திரு சஜீவ் ராய் தஹ்ரானிடம் (இடக்கோடி) இருந்து பெற்றுக் கொள்கிறார். படம்: ஜோய்ஆலுக்காஸ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உடற்பயிற்சிக்கூடத்தில் ‘பிலாண்டுரோனிக்ஸ் பேக்பீட் ஃபிட் 6100’ (BackBeat FIT 6100) அணிந்துகொண்டு உடற்பயிற்சி செய்யும் தமிழ் முரசு செய்தியாளர் திரு வெங்கடேஷ்வரன். (படம்: தமிழ் முரசு)

11 Nov 2019

நலமான வாழ்க்கைமுறையில் தரமான இசை