ஹலால் சான்றிதழுடன் ‘டிம் சம்’ உணவகம்

‘டிம் சம்’ எனப்படும் பாரம்பரிய சீன உணவு வகைகள் பொதுவாக சீனர்களுக்கு பரிட்சயமானவை என்ற எண்ணத்தை மாற்ற வைத் துள்ளது ‘டிம் சம் பிளேஸ்’ உண வகம். எண் 791 நார்த் பிரிட்ஜ் ரோட்டில் அமைந்துள்ள இந்த உணவகம் இப்போது ‘ஹலால்’ சான்றிதழைப் பெற்றுள்ளது. ‘சிக்கன் சியூ மாய்’, சினை இறால் ‘டம்ப்ளிங்’, முட்டை ‘கஸ்ட்டர்ட் பன்’, சீன பாணியில் பொரிக்கப்பட்ட ‘கோபி மஞ்சூ ரியன்’ உட்பட பலதரப்பட்ட உணவு வகைகள் சிங்கப்பூரர்களுக்கே உரிய பாணியில் இங்கு சமைக் கப்படுகின்றன. சீன அல்லது ஜப்பானிய உண வகம் என்றாலே மீன், இறைச்சி ஆகியவற்றின் வாடை அதிகமாக இருக்கும் என்பதால் இந்தியர்கள் பலர் அங்கே செல்வது குறைவாக இருக்கும். என்றாலும் ‘டிம் சம் பிளேஸ்’ உணவகத்திற்கு வரும் இந்திய வாடிக்கையாளர்கள், இங்கு சமைக்கப்படும் உணவின் நறுமணம் பசியைத் தூண்டு வதாகக் கூறுகின்றனர்.

அதுவும் இந்திய, மலாய் முஸ்லிம் வாடிக்கையாளர்கள் தைரியமாக, தயக்கமின்றி ஜப்பானிய/சீன உணவை உண்டு ருசிக்க வாய்ப் பளிக்கிறது ‘டிம் சம் பிளேஸ்’ உணவகம். இவ்வாண்டு பிப்ரவரியில் திறக்கப்பட்ட இந்த உண வகம், கடந்த மாதம் முயிஸ் அமைப்பிடமிருந்து ‘ஹலால்’ சான்றிதழைப் பெற்றது. அந்தச் சான்றிதழைப் பெறு வதற்கு ஐந்து மாதங்களுக்கு மேலாக காத்திருக்க வேண்டி யிருந்ததாக அந்த உணவகத்தின் செயல்பாட்டுப் பிரிவு இயக்குநர் டக்ஸ்பரி லோ தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

Loading...
Load next