என்னை ஓரங்கட்ட சதி நடக்கிறது என்கிறார் காஜல்

பல முன்னணி நடிகர்களுடன் நடித்துக் கொண்டு இருக்கும்  நடிகை காஜல் அகர்வால் தன்னைத் திரையுகில் இருந்து வெளியேற்ற சதி நடக்கிறது என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார். ஒரே நேரத்தில் அஜீத்துடன் 'விவேகம்' விஜய்யுடன் 'மெர்சல்' ராணாவுடன் 'நேனே ராஜூ நேனே அமைச்சர்' போன்ற படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார் காஜல். அதனால் காஜல் மிகவும் உற்சாக இருக்கிறார். இந்நிலையில் "எனக்கு வயதாகி விட்டதாக சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தியைக் கசியவிட்டனர். தற்பொழுது முக அழகிற்காக நான் அறுவை சிகிச்சை பெற்றதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இதைப் பரப்புபவர்களின் கெட்ட எண்ணம் நிறைவேறாது.

"என்னைத் திரையுலகில் இருந்து ஓரங்கட்ட பெரிய சதி நடக்கிறது. இன்னும் சில ஆண்டுகளுக்காவது நான் தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிப்போன்," என்று ஆவேசமாகப் பதிலளித்தார் காஜல் அகர்வால். காஜலை திரையுலகில் இருந்து விலக்கி வைக்க சதி நடந்தாலும் அவரைத் தேடி வாய்ப்புகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon