ஜல்லிக்கட்டு வீரராக விஜய் சேதுபதி

அட்லி இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் 'மெர்சல்' இதில் ஒரு வேடத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் நடிக்கிறார். அண்மையில் படக்குழு வெளியிட்ட சுவரொட்டிப் படம் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டது. அதையடுத்து ஜல்லிக்கட்டு தமிழர்களின் உரிமை என்று தொடர்ந்து முழக்கமிட்டு வரும் தமிழக இளைஞர்கள் விஜய்யின் மெர்சலுக்கு ஏகபோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் 'ரேணிகுண்டா' இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் 'கருப்பன்'. இந்தப் படத்தின் ஒரு காட்சி நேற்று வெளியாகியது. அதில் ஜல்லிக்கட்டு மைதானத்தில் பாய்ந்து செல்லும் ஒரு காளையை விஜய் சேதுபதி அடக்குவது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. ஆக, விஜய்சேதுபதியும் ஜல்லிக்கட்டு வீரராக நடிப்பதை 'கருப்பன்' படக்குழு உறுதிப்படுத்தியிருக்கிறது.