புடவை வாங்க காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி

வேலூர்: பட்டுப்புடவை வாங்க குடும்பத்துடன் காரில் சென்றவர் கள் விபத்தில் சிக்கியதில் அவர்களில் மூவர் பரிதாபமாக பலி யாகினர். இச்சம்பவம் நேற்று முன்தினம் வேலூர் அருகே நிகழ்ந் தது. பெங்களூருவைச் சேர்ந்த அக்குடும்பத்தார் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவை வாங்க ஆசையுடன் காரில் வந்து கொண்டிருந்த னர். அவர்கள் பயணம் மேற்கொண்ட கார், வேலூர் மாவட்டம் களத்தூர் அருகே நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென இருசக்கர வாகனம் குறுக்கே நுழைந்துள்ளது. அதன் மீது மோதாமல் இருக்க காரை வளைத்துள்ளார் ஓட்டுநர். இதில் கட்டுப்பாட்டை இழந்த அக்கார், சாலையின் நடுவே உள்ள தடுப் பையும் கடந்த எதிரே வந்த கொள்கலன் லாரி மீது வேகமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த மூவர் உயிரிழக்க, ஒரு குழந்தை உள்ளிட்ட மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.