விவசாயிகளுக்கு ஆதரவாக உயிரை விட முயன்ற டிராஃபிக் ராமசாமி

சென்னை: கதிராமங்கலத்தில் நடைபெறும் மக்கள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தன் உயிரை மாய்த்துக் கொள்வதாக மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் அவர் சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் திடீர் உண்ணாவிரதம் மேற் கொண்டார். பின்னர் திடீரென தமது அலுவலகத்தின் நான்காவது மாடிக்கு ஏறிச் சென்ற அவர், தன் மேல் சட்டையை கழற்றிவிட்டு தரையில் படுத்துக் கொண்டார். இதையடுத்து, அங்கு கூடிய செய்தியாளர்களிடம், கதிராமங் கலத்தில் ஓஎன்ஜிசிக்கு எதிராகப் போராடியதால் கைது செய்யப்பட்ட பத்து பேரையும் உடனடியாக விடு விக்க வேண்டும்,

தமிழகத்தில் அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என தமது கோரிக்கை களைத் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலிசார், டிராபிக் ராம சாமியை சமாதானப்படுத்தி கீழே இறக்க முயற்சித்தனர். ஆனால் போலிசாரை ஒருமையில் ஏசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட் டார் ராமசாமி. இதையடுத்து போலிசார் அவரைக் குண்டுக்கட்டாக தூக்கி, கீழே அழைந்து வந்தனர். அவருக்கு முதலுதவி சிகிச்சையும் வழங்கப்பட்டது. இந்த திடீர் போராட்டம் கார ணமாக ஏராளமானோர் அப்பகுதி யில் கூடியதால் போக்குவரத்து நிலைகுத்தியது.