அதிபர் தேர்தல் புறக்கணிப்பு: பாமக திடீர் அறிவிப்பு

சென்னை: அதிபர் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக பாமக நேற்று திடீர் முடிவு எடுத்து அறிவித்தது. இதனால் இன்று நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் அக்கட்சியின் ஒரே எம்பியான அன்புமணி ராமதாஸ் வாக்களிக்க மாட்டார். நாட்டின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. பாஜக அணி சார்பில் ராம்நாத் கோவிந்த் களமிறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மீரா குமார் போட்டியிடுகிறார். தமிழகத்தைப் பொறுத்த வரை அதிமுகவின் மூன்று அணிகளும் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கின்றன.

திமுக, காங்கிரசின் ஆதரவு மீரா குமாருக்கு உள்ளது. பாமகவைப் பொறுத்த வரை அதன் இளையரணித் தலைவர் அன்புமணி மட் டுமே நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்நிலையில் அதிபர் தேர்த லில் தமிழக நலன்களை முன்வைத்தே பாமக செயல்படும் என அக்கட்சி யின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதாக மத் திய அரசு உறுதி அளித் தால் மட்டுமே ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடியும் என பாமக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக பாஜக தரப்பில் எந்தவித உத்தரவாதமும் வரவில்லை. இதையடுத்து அதிபர் தேர்தலை புறக்கணிப்பதாக ராமதாஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். அவர் இந்த முடிவை நேற்று அறிவித்தார்.

Loading...
Load next