மலேசியாவில் ‘டெலிகிராமுக்குத் தடையில்லை’

கோலாலம்பூர்: மலேசியாவில் ‘டெலிகிராம்’ சமூக ஊடகத்திற்கு தடை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று டாக்டர் அஹமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். இந்தச் செயலிக்குத் தடை விதித்துள்ள இந்தோனீ சியாவின் முடிவை மதிப்பதாகவும் கூறிய அவர், “மலேசி யாவில் தடை விதிக்கும் எண்ணமில்லை,” என்றார். கடந்த வெள்ளிக்கிழமையன்று புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் நிதி திரட்டவும் டெலிகிராம் செயலியை பயங்கரவாதிகள் பயன்படுத்துவதாகக் கூறி இந்தோனீசியா அதற்குத் தடை விதித்தது.

Loading...
Load next