காற்பந்து அரங்கின் சுவர் இடிந்து 8 பேர் மரணம்

டக்கார்: செனகலில் காற்பந்து அரங்கத்தின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்ததில் எட்டுப் பேர் இறந்தனர். இந்த சம்பவத்தில் மேலும் 49 பேர் காயம் அடைந்தனர் என்று அந்நாட்டின் அதிகாரிகள் தெரி வித்தனர். தலைநகர் டகாரில் உள்ள டெம்பா டியோப் அரங்கத்தில் காற்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சுவர் சரிந்து விழுந்தது. ஒரு கட்டத்தில் இரு தரப்பு அணியைச் சேர்ந்த ரசிகர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு காவல்துறை யினர் வரவழைக்கப்பட்டனர். ரசிகர்களைக் கலைக்க காவல் துறையினர் கண்ணீர்ப் புகையை பயன்படுத்த வேண்டியிருந்தது. அப்போது ரசிகர்கள் அச்சத் தில் கண்மூடித்தனமாக ஓடியதால் நெரிசல் ஏற்பட்டு சுவரும் இடிந்து விழுந்தது.

ரசிகர்கள் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இணையத்தில் வெளியான படங்களில் குட்டை யான சுவர் மீது ரசிகர்கள் பலர் ஓடுவதைக் காண முடிந்தது. உள்ளூர் செய்தி நிறுவனமான ஏபிஎஸ், சம்பவ இடத்திற்கு அவ சர சிகிச்சை வாகனங்களும் தீ அணைப்பு வாகனங்களும் வர வழைக்கப்பட்டதாக தெரிவித்தது. போர், யூனியன் ஸ்போர்ட்டிவ் ஆகிய இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் 1-1 கோல் கணக்கில் சம நிலையில் முடிந்தது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் போர் அணி மற்றொரு கோலை புகுத்தி வெற்றி பெற்றது. இதையடுத்து வன்முறை வெடித்தது. சுவர் இடிந்த சம்பவத்தில் நண்பரை இழந்த செய்க் மாபா டையோப் என்பவர், “சுவர் சரிந்து விழுந்ததால் எங்களில் பலரை இழந்துவிட்டோம்,” என்றார்.

அரங்கத்தின் சுவர் இடிந்துவிழுந்ததில் எட்டுப் பேர் கொல்லப்பட்டனர். ஏஎஃப்பி

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon