கபடி போட்டிக்குப் பரிசுத் தொகை ரூ.8 கோடி

ஹைதராபாத்: 5-ஆவது சீசன் புரோ கபடிப் போட்டிக்கான பரிசுத் தொகை ரூ. 8 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும் 2-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.1.8 கோடியும், 3-ஆவது இடம்பிடிக்கும் அணிக்கு ரூ.1.2 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்படவுள்ளது. இதுதவிர மதிப்புமிக்க வீரர் விருதை வெல்பவருக்கு ரூ.15 லட்சம் வழங்கப்படவுள்ளது. 5-ஆவது சீசனில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன. இதில் 4 அணிகள் முதல்முறையாக களமிறங்குகின்றன. வரும் 28-ஆம் தேதி புரோ கபடி லீக் தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் தெலுகு டைட்டன்ஸும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதுகின்றன.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon