ரவி சாஸ்திரி சம்பளத்தை நிர்ணயிக்க 4 பேர் குழு

புதுடெல்லி: இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ரவி சாஸ்திரி (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்தை உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பிசிசிஐயின் நிர்வாகக்குழு ஏற்றுக்கொண்டது. தலைமைப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டாலும் சம்பளம் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதனால் சம்பளத்தை நிர்ணயம் செய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவை நிர்வாகக் குழு அமைத்துள்ளது.

இந்தக் குழு ரவி சாஸ்திரியின் சம்பளத்தை நிர்ணயம் செய்யும். இந்தக் குழுவில் பிசிசிஐ பொறுப்புத் தலைவர் சி.கே. கன்னா, சிஇஓ ராகுல் ஜோரி, டயானா எடுல்ஜி மற்றும் பிசிசிஐ பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ரவி சாஸ்திரி இந்திய அணியின் இயக்குநராக செயல்படும்போது ஆண்டிற்கு 6 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதனால் பயிற்றுவிப்பாளர் பதவிக் காலத்தில் 6 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon