அரசு விளக்கம்: பழைய நகை, கார் விற்பனைக்கு ஜிஎஸ்டி இல்லை

புதுடெல்லி: பழைய நகைகளை தனிநபர் ஒருவர் கடையில் விற்கும்போது ஜிஎஸ்டி செலுத்த தேவையில்லை என்று அறிக்கை ஒன்றில் இந்திய வருவாய் துறை விளக்கம் அளித்துள்ளது. அதே சமயம் ஜிஎஸ்டியில் பதிவு செய்யாத விநியோகிப்பாளர்களிடமிருந்து பழைய நகைகளை ஜிஎஸ்டியில் பதிவு செய்த கடைக்காரர்கள் வாங்கும்போது மூன்று விழுக்காடு வரி வசூலிக்க வேண்டும். இந்தப் பரி வர்த்தனை வர்த்தக நோக்கில் நடைபெறுவதால் இதற்கு ஜிஎஸ்டி உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டது. கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பழைய வாகனங்கள் விற்பனைக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்றும் அறிக்கை குறிப்பிட்டது.