சூரிய சக்தியில் இயங்கும் முதல் ரயில் அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவின் சூரிய சக்தியில் இயங்கும் முதல் ரயில் டெல்லியில் அறிமுகமாகியுள்ளது. கடந்த வரவு செலவு திட்டத் தின்போது டீசல், மின்சார பயன் பாட்டை குறைக்கும் வகையில் சூரிய சக்தியில் இயங்கும் ரயில் கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று அப்போது ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியிருந்தார். இந்த நிலையில் சூரிய சக்தியில் இயங்கும் முதல் ரயில் சேவையை டெல்லியில் அமைச்சர் சுரேஷ் பிரபு தொடங்கி வைத்துள் ளார். இந்த ரயிலில் மொத்தம் ஆறு பெட்டிகள் உள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 16 சூரியத் தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த சூரியத் தகடுகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின் சாரத்தை ரயிலில் உள்ள விளக்கு கள், மின் விசிறி ஆகியவற்றுக்குப் பயன்படுத்த முடியும். மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, “சூரிய சக்தி ரயில் மூலம் ஒரு ரயில் பெட்டி ஓராண்டில் 9 டன் கரிய மில வாயு வெளியிடுவது தவிர்க்கப்படும். மேலும் ஆறு பெட்டிகள் கொண்ட ஒரு சூரிய ரயில் மூலம் ஆண்டுக்கு 21 ஆயி ரம் லிட்டர் டீசல் மிச்சமாகும். ஆண்டுக்கு 12 லட்ச ரூபாயைச் சேமிக்க முடியும்,” என்றார்.

இந்தியாவில் சூரிய சக்தியில் இயங்கும் முதல் ரயில் சேவை டெல்லியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. படம்: இந்திய ஊடகம்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon