ரூபா: சசிகலா சமையல் அறை படங்கள் அழிப்பு

பெங்களூரு: சிறையில் சசிகலா வுக்குச் சிறப்பு சலுகைகள் வழங்கப்படுவதாக அறிக்கை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற் படுத்திய சிறைத்துறை அதிகாரி டிஐஜி ரூபா, சோதனையின்போது பதிவு செய்யப்பட்ட தனது காணொளிகளை அதிகாரிகள் சிலர் அழித்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். சிறையில் சிலருக்கு மட்டும் வழங்கப்படும் சலுகைகள், வசதி கள் பற்றி பதிவான காணொளி காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பது பலவித சந்தேகங்களை எழுப்பி இருப்பதாகவும் அவர் கூறியுள் ளார். டெக்கான் குரோனிக்கல் ஆங் கில நாளிதழுக்குப் பேட்டியளித்த டிஐஜி ரூபா, சசிகலா தங்கியிருந்த சிறைக்குச் சென்றபோது கை யடக்கக் கேமரா மூலம் கண் காட்சிகளைப் பதிவு செய்ததாகவும் அவற்றைச் சில அதிகாரிகள் அழித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனை மறுத்துள்ள டிஜி எச்.என் சத்யநாராயண ராவ், “பெண்கள் தங்கியிருந்த அறை களுக்கு ரூபா செல்லவேயில்லை,” என்றார். ஆனால் ஜூலை 10ஆம் தேதி சசிகலா அறை உட்பட பெண்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடங் களுக்குச் சென்றதாக ரூபா தெரி வித்தார். “கைபேசி வேலை செய்யாததால் கையோடு வீடியோ பதிவு கருவியை எடுத்துச் சென்றிருந் தேன். அதில் சசிகலா தங்கிய அறைகளையும் பதிவு செய்தேன். பின்னர் அதிகாரிகளிடம் ஒப் படைத்து கேமராவில் பதிவானக் காட்சிகளைப் பதிவிறக்கம் செய்து என்னிடம் அனுப்பி வைக்குமாறு கூறினேன். ஆனால் நான் பதிவு செய்த சிறப்பு சமையல் அறை உள்ளிட்ட காட்சிகள் காண வில்லை,” என்றார் டிஐஜி ரூபா. இதற்கிடையே கர்நாடகா அரசு, ஊடகங்களுக்கு ஏன் தகவல்களை வெளியிட்டீர்கள் என்று விளக்கம் கேட்டு ரூபாவுக்கு கடிதம் அனுப்பி யுள்ளது.

கர்நாடகா முதல்வர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளதால் சிறைத் துறை அதிகாரி ரூபாவுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. படம்: இந்திய ஊடகம்