உதயநிதியைக் கவர்ந்த படம் ‘ஒரு குப்பை கதை’

படத் தலைப்பில்தான் குப்பை இருக்கிறது, ஆனால் படம் பார்த்தவர்களோ அருமை என்று பாராட்டித் தள்ளுகிறார்களாம். அதனால் உற்சாகத்தில் மிதக் கிறார் பிரபல நடன இயக்குநர் தினேஷ். இவர் கதாநாயகனாக நடித் துள்ள படம் ‘ஒரு குப்பை கதை’. இயக்குநர் அஸ்லாம் தயாரித் திருக்கும் இப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த காளி ரங்கசாமி இயக்கியுள்ளார். அண்மையில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினுக்குத் திரை யிட்டுக் காண்பித்தனராம். மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்ட படம் என்று பாராட்டிய அவர், உடனடியாக தாமே உலகம் முழுவதும் வெளியிடுவதாகக் கூறிவிட்டார்.

இதுவே படத்தின் வெற்றிக்கு முதல் படியாக அமைந்துள்ளது என்று உற்சா கத்துடன் பேசுகிறார் தினேஷ். “அண்மைக்காலமாக தனது படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார் உதயநிதி. எனினும் அவர் என் படத்தைப் பார்த்தால் நிச்சயம் ஈர்க்கப்படு வார் என உறுதியாக நம்பினேன். இந்தக் காலகட்டத்தில் இப்படிப் பட்ட படங்கள்தான் நம் சமுதா யத்துக்குத் தேவை. “நடன இயக்குநர் என்றாலும் தினே‌ஷுக்குள் மிகத் திறமையான நடிகர் உள்ளார் என்று படம் பார்த்த பிறகு பாராட்டினார் உதயநிதி,” என்கிறார் இயக்குநர் காளி ரங்கசாமி.

Loading...
Load next