கஞ்சா கருப்புக்கு ஜோடியான சங்கவி

திரையுலகில் மதிப்பு குறைந்துவிட்டதே என்று புலம்புவதில் அர்த்தமில்லை. மாறாக கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்கு சங்கவியே உதாரணம். முன்னாள் நாயகியான இவர், ‘நான் யார் தெரியுமா’ என்ற படத்தில் கஞ்சா கருப்புக்கு ஜோடியாக நடிக்கிறாராம். இது திகில் நிறைந்த பேய்ப் படமாக உருவாகி வருகிறது. “என் கதாபாத்திரம் நன்றாக இருந்தது. பேய்ப் படத்துக்கு ரசிகர்கள் ஆதரவு கிடைக்கும் என்பதால் நடிக்கிறேன்,” என்கிறார் சங்கவி.