சுடச் சுடச் செய்திகள்

விக்ரம் பாராட்டு மழையில் நனைந்த ஐ‌ஸ்வர்யா ராஜே‌ஷ்

ஐஸ்வர்யாவைப் பாராட்டிய விக்ரம் இரட்டிப்பு மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு பக்கம் தமிழக அரசு விருது கொடுத்து உற்சாகப்படுத்தி உள்ளது எனில், மறுபக்கம் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து விக்ரம் பாராட்டியது இன்ப அதிர்ச்சி அளித்துள்ளதாம். இந்தப் படத்தில் தமக்கான கதாபாத்திரம் குறித்து ஏதும் விவரம் தெரிவிக்க இயலாது என்றாலும் கவுதம் மேனன் இயக்கத்தில் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா. “எனக்கு விருது கிடைத்த தகவலைத் தெரிவித்தபோது அற்புதம் எனப் பாராட்டினார் விக்ரம். மேலும், இந்தப் படத்தில் எனது நடிப்பு அவரை வெகுவாக ஈர்த்த தாகவும் கூறினார். எந்தவித பந்தாவும் இல்லாமல் அவ்வளவு பெரிய நடிகர் என்னைப் பாராட்டியது ஆச்சரியம் அளித்தது,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon