தற்காலிக இணைச்சாலை நீளமான மரக் நேற்று திறக்கப்பட்டது

சாங்கி நோக்கிச் செல்லும் தீவு விரைவுச் சாலையில் கட்டப்பட்டு வந்த மேம்பாலச் சாலை இடிந்து விழுந்ததையடுத்து, அப்பர் சாங்கி ரோடு ஈஸ்ட்டை தீவு விரைவுச் சாலையுடன் இணைக்கும் தற் காலிக இணைச் சாலை நேற்று பிற்பகல் திறக்கப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்தது. பாதுகாப்பு, வடிவமைப்பு சோதனைகளைத் தொடர்ந்து சாலை திறக்கப்பட்டதாக ஆணை யத்தின் அறிக்கை குறிப்பிட்டது. முன்னதாக அந்த இணைச் சாலை சனிக்கிழமை திறக்கப் படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்காலிகச் சாலையை அமைக்க தரையைத் தயார்படுத்த வேண்டி இருந்ததாகவும் மழை யினால் அப்பணி தாமத மானதாகவும் நிலப்போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. பாதிக்கப்பட்ட இணைச் சாலையில் விசாரணைகள் தொடர்கின்றன.

அந்த இணைச்சாலையில் விசாரணையும் மறுநிர்மாணப் பணிகளும் முழுமையாக நிறைவ டையும் வரை தற்காலிக இணைச் சாலை செயல்பாட்டில் இருக்கும் என்று அறிக்கை கூறியது. அத்துடன் வாகனமோட்டிகள் கவனத்துடன் வாகனங்களை ஓட்டுமாறும் தற்காலிக சாலை அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அந்த அறிக்கை கேட்டுக் கொண்டது. தீவு விரைவுச்சாலையில் கட்டப் பட்டு வந்த மேம்பாலச் சாலை வெள்ளிக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் ஒரு சீன நாட்டு கட்டுமான ஊழியர் உயிர் இழந்துள்ளார். பத்துப் பேர் காயமடைந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!