சீரமைக்கப்படும் உபின் கம்பத்து வீடுகள்

புலாவ் உபினில் உள்ள கம்பத்து வீடுகளை பழைய நிலைமைக்கு மறுசீரமைக்கும் பணியை தேசிய பூங்கா வாரியம் மேற்கொள்ளவுள் ளது. அந்த வீடுகளில் சிங்கப் பூரைச் சேர்ந்தவர்கள் குடியிருக்கும் வாய்ப்பும் ஏற்படலாம். மரபுடைமை நிபுணர்கள், இயற்கைப் பராமரிப்புக் குழுக்கள் போன்ற சமூகப் பங்காளிகளுடன் இணைந்து இந்தத் திட்டத்தை தேசிய பூங்கா வாரியம் மேற்கொள்ளவுள்ளது. சீரமைக்கப்படவுள்ள வீடுகளில், 1930களில் கட்டப்பட்ட பயன் படுத்தப்படாத எண் 63சி வீடும் ஒன்று. திரு படகுத் துறையில் இருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ளது.

2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அதிகாரிகளிடம் திருப்பிக்கொடுக்கும் வரை, திரு டான் பாக் டீயும் அவரது குடும்பத் தினருக்கும் 50 ஆண்டுகள் அந்த வீட்டில் குடியிருந்தனர். “அது பழைய வீடு. அழுக் கடைந்துள்ளது. பல பகுதிகள் உடைந்துள்ளன. அங்கு பாம்பு களும் உண்டு. அதைத் திருத்தி, பார்க்க அழகாக்குவது நல்லது,” என்றார் திரு டான் பாக் டீயின் உறவினரான 69 வயது திரு டான் சீ கியாங். எத்தனை வீடுகளைச் சீரமைப்பது என்பது இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. தற்போதைக்கு திரு டானின் வீடும் மேலும் நான்கு வீடுகளும் சீரமைப்புக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. உபினில் 70 கம்பத்து வீடுகள் உள்ளன.

உபினில் உள்ள சிதைந்து போயிருக்கும் கம்பத்து வீடுகளில் ஒன்று. பாதுகாக்கப்பட்ட கம்பத்து வீடுகளையும் பழத்தோட்டங்களையும் உபின் தீவுக்குச் செல்வோர் காணலாம். படம்: சாவ் பாவ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon