சுடச் சுடச் செய்திகள்

சமூகத்திற்கு உதவும் குடியிருப்பாளர் திட்டங்கள்

முன்பெல்லாம் பிரச்சினைகள் தலையெடுத்தபோது, அவற்றுக்குத் தீர்வு காண அரசாங்கம் என்ன செய்ய முடியும் எனக் குடியிருப் பாளர்கள் கேட்டனர். ஆனால் இன்று, குடியிருப்பாளர்களே தன் முனைப்புடன் அதிகமான நடவடிக் கைகளை மேற்கொண்டு, தங் களுக்காகவும் சமூகத்திற்காகவும் மேம்பட்ட சுற்றுச்சூழலை உரு வாக்க புதிய வழிகளைக் கண்டறி கிறார்களென கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் கூறினார். செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் இரண்டாம் தற்காப்பு அமைச்சரு மான திரு ஓங், மக்கள் கழக இளையர் அணியின் முதல் ‘லவ்ஸ் ரெட்’ இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு முன்பாக நேற்று பேசினார்.

சிங்கப்பூரின் 52வது தேசிய தினத்தை முன்னிட்டு மக்கள் கழக இளையர் நிர்வாகக் குழுக் கள் வழிநடத்தும் இந்த இயக்கம், அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தொடர்ந்து நடைபெறும். இளையர்கள் ஏற்பாடு செய்யும் 70க்கும் மேலான நிகழ்ச்சிகள் இயக்கத்தில் இடம்பெறுகின்றன. ‘லவ்ஸ் ரெட்’ இயக்கத்தின் முதல் நிகழ்ச்சியான பிரமிப்பூட்டும் பந்தயம் நேற்று காலை நடை பெற்றது. சிங்கப்பூரின் அடை யாளம், மரபுடைமை சார்ந்த விளை யாட்டுகளில் சுமார் 150 இளையர்கள் பங்கெடுத்தனர். கிளமெண்டியில் வாழும் வசதி குறைந்த குடும்பங்களுக்கு இளை யர்கள் உதவிபுரியும் இல்லப் புதுப்பிப்பு நடவடிக்கை, உணவுப் பொருள் திரட்டி விநியோகிக்கும் நடவடிக்கை ஆகியவை மற்ற நிகழ்ச்சிகளில் உள்ளடங்கும்.

அமைச்சர் ஓங் யீ காங் கோலிகுண்டு (மார்பிள்) விளையாடுகிறார். அருகில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு விக்ரம் நாயர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon