சுடச் சுடச் செய்திகள்

‘டோடோல்’ கிண்டிய பிரதமர் லீ சியன் லூங்

அங் மோ கியோ, செங்காங் தொகுதிவாசிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரதமர் லீ சியன் லூங் நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தில் நேற்று கலந்துகொண்டார். சமூகப் பூங்கா ஒன்றில் அளிக்கப்பட்ட மதிய உணவு டன் பிரதமர் உட்பட பலரும் சேர்ந்து சமைத்த ‘டோடோல்’ என்னும் மலாய் பலகாரம் வந்திருந்தோருக்கு வழங்கப் பட்டது. ஏறக்குறைய 700 பேர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில், மூத்த துணை அமைச்சர் கோ போ கூன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு டேரல் டேவிட், திரு அங் ஹின் கீ, டாக்டர் இந்தான் அஸ`ரா மொக்தார், திரு கான் தியாம் போ, மூத்த துணை அமைச்சர் லாம் பின் மின் ஆகியோரும் கலந்துகொண்டனர். நோன்புப் பெருநாள் நடந்து சில வாரங்கள் கழித்து இந்தக் கொண்டாட்டம் நடந்தாலும், இது மிகத் தாமதமில்லை. இந்த நிகழ்ச்சி குடியிருப் பாளர்களிடம் பிணைப்பை வலுப்படுத்தும் என நம்புவதாக நிகழ்ச்சியில் மலாய் மொழியில் பேசிய பிரதமர் லீ சியன் லூங் கூறினார். நீளமான மரக் கரண்டியால் டோடோல் கிண்டும் பிரதமர் லீ சியன் லூங் (வலமிருந்து நான்காவது). நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற நாடாளுமன்ற உறுப்பினர் களும் டோடோல் கிண்டி மகிழ்ந்தனர்.

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon