மூவர் பலி: சாலையில் அமர்ந்து மது அருந்தியவர்களால் விபத்து

விழுப்புரம்: சாலையில் அமர்ந்து மது அருந்தியவர்களால் விபத்து நிகழ்ந்து, இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரத்தைச் சேர்ந்த 20 பேர் சிறிய ரக வேனில் வந்தவாசியில் உள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை ஊர் திரும்பினர். அவர்களது வாகனம் வைரன்பேட்டை என்ற பகுதியை நெருங்கியபோது, சிலர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டு ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் மீது மோதாமல் இருக்க, அவர் வேனை இடதுபுறமாகத் திரும்பியபோது, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த எதிர்பாராத விபத்தில், வேனில் பயணம் செய்த 35 மற்றும் 60 வயதுடைய இரு பெண்கள் அதே இடத்தில் பலியாகினர். ஓட்டுநர் உட்பட படுகாயமடைந்த நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Loading...
Load next