மாணவி மீது குண்டர் சட்டம்: 68 மாணவர்கள் இடைநீக்கம்

சென்னை: கதிராமங்கலத்தில் நடைபெற்று வரும் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இந் நிலையில் போராட்டக் குழுவுக்கு ஆதரவாக களமிறங்கிய சென்னை கல்லூரி மாணவர்கள் 68 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை பாய்ந்துள்ளது. மேலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகப் போராடிய சேலத்தைச் சேர்ந்த மாணவி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட் டுள்ளது மாணவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டங்களை எதிர்த்து நெடுவாச லிலும், கதிராமங்கலம் பகுதியி லும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக அப்பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அரசியல் கட்சிகளும், பொது அமைப்பினரும், சமூக ஆர்வலர் களும் இப்போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலை யில், அரசுத் தரப்பிலும் சில கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 

நெடுவாசல் போராட்டக் களத்தில் கூடியுள்ள நூற்றுக்கணக்கான மக்கள் படம்: தகவல் ஊடகம்