ஆடை மாற்றும் மாணவியை காணொளி எடுத்த ஆடவருக்குச் சிறை

தொடக்கக் கல்லூரி ஒன்றில் உள்ள மாணவிகளுக்கான கழிவறைக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு தமது மேலாடையை மாற்றிக்கொண்டிருந்த மாணவியைக் காணொளி எடுத்த ஆடவருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதியன்று நன்யாங் தொடக்கக் கல்லூரியில் சிங்கப்பூர் ஆகாயப் படை அதிகாரியான 26 வயது வீ வெய் ஜியே இந்தக் குற்றத்தைப் புரிந்தார். விளையாட்டுப் பயிற்சியை முடித்துக்கொண்டு தமது ஆடையை மாற்றுவதற்காகக் கழிவறைக்குச் சென்றதாக அந்தப் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஆடை மாற்றிக்கொண்டிருந்தபோது யாரோ கைபேசி மூலம் தம்மைக் காணொளி எடுத்துக்கொண்டிருப்பதைப் பார்த்ததாக அவர் கூறினார். தாம் அலறியதும் காணொளி எடுத்துக்கொண்டிருந்தவர் அங்கிருந்து ஓடும் சத்தம் கேட்டதாக அவர் தெரிவித்தார். ஆடையை மாற்றிக்கொண்டு வெளியே ஓடி வந்து பார்த்தபோது யாரும் அங்கு இல்லை என்றார் அந்த மாணவி. இதுகுறித்து தமது ஆசிரியரிடம் அந்த மாணவி தெரிவித்தார். கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்த காட்சிகளைப் போட்டு பார்த்த துணைத் தலைமையாசிரியர் கையில் கைபேசியுடன் பெண்களுக்கான கழிவறையைவிட்டு வீ ஓடிச் சென்றதைக் கண்டுபிடித்தார். வீயின் இருப்பிடம் அறிந்து அவரைத் தேடிக் கண்டுபிடித்ததும் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது கைபேசியில் பதிவாகியிருந்த மாணவி ஆடை மாற்றும் காட்சி அழிக்கப்பட்டிருந்தது. வீட்டுக்குச் செல்லும் வழியில் அந்தக் காணொளியைப் பார்த்து அதன் பின் அதை கைபேசியிலிருந்து அழித்துவிட்டதாக வீ தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!