சாதனையைச் சமன் செய்த ஹேமில்டன்

லண்டன்: பிரிட்டிஷ் எஃப்1 கார் பந்தயத்தை ஐந்தாவது முறையாக வென்றுள்ளார் லுவிஸ் ஹேமில் டன். தனது சொந்த மண்ணில் நடந்த இப்போட்டியில் அவர் வென்றதன் மூலம் ஏற்கெனவே கிளார்க், அலேன் புரோஸ்ட் ஆகி யோரின் சாதனையைச் சமன் செய்துள்ளார். பந்தய தூரத்தை 1.21.27.430 வினாடிகளில் கடந்த ஹேமில்டன், முதல் இடத்தில் உள்ள வெட்டலு டனான புள்ளிகள் இடைவெளியை ஒன்றாக குறைத்து உள்ளார். காரில் ஏற்பட்ட கோளாறால் வெட்டலால் 7வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஆனாலும் 177 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார் வெட்டல். 9வது இடத்தில் இருந்த போட்டாஸ் கடும் போட்டிக்குப் பின்னர் இரண்டாவது இடத்தில் முடித்தார். ஹங்கேரி எஃப்1 கார் பந்தயம் வரும் 30ஆம் தேதி நடை பெறுகிறது.

பிரிட்டிஷ் கார் பந்தயத்தை வென்ற ஹேமில்டனைக் கொண்டாடும் ரசிகர்கள். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next