அடுத்த ஆண்டும் வெல்வேன் - ரோஜர் ஃபெடரர்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ள ரோஜர் ஃபெடரர் அடுத்த ஆண்டும் விம்பிள்டன் பட்டம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார். 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளாக எட்டாக்கனியாக இருந்த விம்பிள் டன் பட்டத்தை இவ்வாண்டு கைப்பற்றியுள்ளார் 36 வயது பெடரர். இதன்மூலம் எட்டு முறை விம்பிள்டன் பட்டம் வென்ற ஒரே டென்னிஸ் வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர் சாம்ப்ராரஸ், வில்லியம் ரென்ஷா ஆகிய இரு வரும் ஏழு முறை விம்பிள்டன் பட்டம் வென்று சாதனையைப் படைத்து இருந்தனர்.

இவர்களது சாதனையை முறி யடித்த ஃபெடரர் இதுவரை மொத்தம் 19 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங் களை வென்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். "விம்பிள்டன் டென்னிஸ் போட்டி எனக்கு மிகவும் பிடித்த மான ஒன்று. "காயத்தில் இருந்து மீண்டு சிறப்பாக விளையாடுவேன் என்று நம்பிக்கை கொண்டு இருந்தேன். ஆனால் இவ்வளவு சிறப்பானதாக இருக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. "ஆஸ்திரேலிய பொது விருது உட்பட இவ்வாண்டு இரண்டு கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. "அடுத்த ஆண்டும் நான் விம்பிள்டன் பட்டம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது," என்று கூறினார் ஃபெடரர். நேற்று நடந்த விம்பிள்டன் இறுதிப் போட்டியில் 7ஆம் நிலை வீரரான குரோ‌ஷியாவின் சிலிச்சை 6-3 6-1, 6-4 என்ற செட் கணக் கில் எளிதில் வீழ்த்தி வெற்றியாளர் பட்டத்தை வென்றார் ஃபெடரர். காயம் காரணமாக சிலிச்சால் ஃபெடரருக்கு கடுமையாக போட் டியைக் கொடுக்க முடியவில்லை.

எட்டாவது முறையாக விம்பிள்டன் டென்னிஸ் பட்டம் வென்று சாதனை படைத்த மகிழ்ச்சியில் ரோஜர் ஃபெடரர். படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!