சுடச் சுடச் செய்திகள்

வடகொரியாவுடன் ராணுவப் பேச்சு தொடங்க யோசனை

சோல்: வடகொரியாவுடன் ராணுவப் பேச்சைத் தொடங்குவது குறித்து தென்கொரியா யோசனை கூறி உள்ளது. வடகொரியா மேற்கொண்ட ஏவுகணை சோதனையைத் தொடர்ந்து கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவும் வேளையில் தென்கொரியா இந்த யோசனையைத் தெரிவித்துள்ளது. தடைபட்ட இருதரப்பு பேச்சு வார்த்தையைத் தொடங்கவும் இரு கொரியாக்களையும் சேர்ந்தவர்கள் சந்தித்துப் பேசுவதற்கான ஏற்பாடு களை மீண்டும் செய்யவும் தென் கொரியா வேண்டுகோள் விடுத் துள்ளது.

இரு கொரியாக்களுக்கும் இடை யில் நிலவும் விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராணுவப் பேச்சை மீண்டும் தொடங்க தென்கொரியா விரும்புகிறது என்று தென்கொரிய தற்காப்பு துணை அமைச்சர் சூ சோ சுக் கூறினார். பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பின் மூலம் கொரிய தீபகற்பத்தில் நிலவும் பதற்றத்தை தணிக்க முடியும் என்று அமைதிக்கான ஒருங்கிணைப்பு அமைச்சர் சோ எம்யெங் கூறினார். இரு கொரியாக்களுக்கும் இடையில் நடந்த பேச்சு வார்த்தை 2015ஆம் ஆண்டு முதல் தடைபட்டுள்ளது.

வடகொரியாவுடன் அணுக்க உறவை ஏற்படுத்திக்கொள்ள தென் கொரிய அதிபர் மூன் ஜே விரும்பு கிறார். தென்கொரியா முன்வைத்த யோசனைக்கு வடகொரியா இதுவரை பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon