கடலில் தத்தளித்த யானைகளைக் காப்பாற்றிய இலங்கை கடற்படை

திரிகோணமலை கடலோரப் பகுதி யிலிருந்து கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு, தத்தளித்தபடி இருந்த இரண்டு குட்டி யானை களை இலங்கைக் கடற்படையினர் காப்பாற்றிக் கரைசேர்த்தனர். சுற்றுக்காவல் படகு மூலம் வழக்கமான கடலோரக் கண்கா ணிப்பில் ஈடுபட்டிருந்த கடற்படை அதிகாரிகள் சிலர் கடலில் தத்த ளித்தப்படி இருந்த அவ்விரு குட்டி யானைகளையும் கண்டனர். இதையடுத்து, கடற்படையின ரும் திரிகோணமலை வனத்துறை அதிகாரிகளும் இணைந்து அந்த யானைகளை மீட்கும் முயற்சியை மேற்கொண்டனர். யானைகளை மீட்பதற்காக மூன்று அதிவேக சுற்றுக்காவல் படகுகளையும் கடற் படையின் முக்குளிப்பாளர்கள் குழு ஒன்றையும் கடற்படை அங்கு அனுப்பியது. கரைப்பகுதிக்குப் பாதுகாப்பாக வழிநடத்திச் செல்லப்பட்ட அந்த இரு யானைகளும் பின்னர் அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விடப்பட்டன.

இத்தகைய சம்பவம் நடந்து இருப்பது இம்மாதத்தில் இது இரண்டாவது முறை. முன்னதாக, இம்மாதத் தொடக் கத்தில் இலங்கையில் வடக்கு கடலோரப் பகுதியில் யானை ஒன்று இப்படி கடலுக்குள் அடித் துச் செல்லப்பட்டு, பின் கடற்படை அதிகாரிகளால் மீட்கப்பட்டதாக ஸின்ஹுவா செய்தி கூறுகிறது. அந்தச் சம்பவத்தில் இரு பெரிய வனப்பகுதிகளுக்கு இடைப் பட்ட கொக்கிளை உப்பங்கழியைக் கடக்கும்போது அந்த யானை கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட் டிருக்கலாம் என்று இலங்கை கடற்படை தெரிவித்தது.

கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்ட யானைகளை இலங்கை கடற்படையினரும் திரிகோணமலை வனத்துறையினரும் இணைந்து பாதுகாப்பாகக் கரைசேர்த்து, அருகிலிருந்த வனப்பகுதிக்குள் விட்டனர். படம்: ஏஎஃப்பி

Loading...
Load next