கிண்டல் செய்யும் சுவரொட்டி வெளியீடு

ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தரமணி’ எதிர்வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி திரைகாண உள்ளது. இதில் ஆன்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு தணிக்கைக் குழு ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இதையடுத்து தணிக்கைக் குழுவை மறைமுகமாக கிண்டல் செய்து படக்குழுவினர் சுவரொட்டி ஒன்றை வெளியிட்டுள்ளது கோடம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. “ஆண் ‘ரா’வாக மது அருந்தினால் ‘யு/ஏ’, பெண் ‘ரா’வாக அருந்தினால் ‘ஏ’! ஆக, ‘தரமணி’ படம் ‘ஏ’,” என்று சுவரொட்டியில் குறிப்பிட்டு, தணிக்கைக் குழுவை மறைமுகமாக படக்குழு கிண்டல் செய்துள்ளது. இப்படத்தில் பெண் மது அருந்துவது போன்ற காட்சிகள் உள்ளனவாம். அதன் காரணமாகவே ‘ஏ’ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் காட்சிகளை நீக்குமாறு தணிக்கைக் குழுவினர் அறிவுறுத்தியபோது, இயக்குநர் ராமும் தயாரிப்பாளரும் திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகத் தகவல். இப்படத்தில் ஆன்ட்ரியாவின் நடிப்பு அற்புதமாக இருப்பதாக படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அம்மணி ஏகப்பட்ட உற்சாகத்தில் மிதந்து கொண்டிருக்கிறாராம்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

‘இரண்டாம் உலகப் போரின் கடைசித் துண்டு’ படக்குழுவினர்.

20 May 2019

‘ஒரு மனிதனின் கதைக்குள் பல கதைகள்’