பாதியில் வெளியேறிய தனுஷ்

அண்மைய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கடும் கோபமடைந்த தனுஷ், பாதியில் வெளி யேறியுள்ளார். ஹைதராபாத் சென்றிருந்த தனுஷை, உள்ளூர் தொலைக்காட்சிக்காக பேட்டி கேட்டுள் ளனர். அதற்கு ஒப்புக் கொண்ட அவரிடம், வழக்கமான கேள்விகளே தொடக்கத்தில் முன்வைக்கப்பட்டன. அவரும் இயல்பாக பதில்களை வழங்கிக் கொண்டிருந்த நிலையில், திடீரென கேள்விகள் தடம் மாறினவாம். பின்னணிப் பாடகி சுசித்ரா சில நாட்களுக்கு முன் தனுஷ் குறித்து விமர்சித்தது தொடர்பாக சில கேள்விகளை எழுப்பியுள்ளார் பேட்டி கண்டவர். இதனால் தனுஷ் அதிர்ச்சி அடைந்தாராம். தொடர்ந்து அந்த விவகாரத்தை மட்டுமே பேட்டி கண்டவர் குடைந்தெடுக்க, தனுஷ் அதிருப்தியடைந்துள்ளார்.

ஒரு கட்டத்தில், “சுசித்ரா வெளியிட்ட விவரங்கள், புகைப் படங்களால் உங்களது திருமண வாழ்க்கையில் புயல் வீசுகிறதாமே?” என்று கேள்வி கேட்க, ஆத்திரமடைந்த தனுஷ், பாதிப் பேட்டியில் வெளியேறியுள்ளார். இதையடுத்து தொலைக்காட்சி நிர்வா கத்தினர் அவரை சமாதானப்படுத்தி உள்ளனர். அதன் பிறகு பேட்டியை முடித்துக் கொடுத்தாராம் தனுஷ். எனினும் அந்தப் பேட்டியில் பல்வேறு சுவாரசியமான விஷயங்களைக் கூறியுள்ளார். பிரபலமாக இருப்பதால்தான் பல ஆபத்துகளும் சூழ்கிறது. ஆனால் இந்தப் பிரபலம் என்ற அந்தஸ்து எல்லோருக்கும் அமையாது. அதற்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். ஆயிரக்கணக்கான லட்சக் கணக்கான ரசிகர்களை சம்பாதிப்பது சாதாரண வி‌ஷயம் இல்லை. அதனால் பிரபலமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சிதான். “சினிமா தவிர வேறு உலகம் எனக்கு தெரியாது. கடவுள் அருளால்தான் இந்த அளவுக்கு உயரத்தில் இருக்கிறேன்.

“நான் மற்றவர்கள் விவகாரங்களில் தலையிட மாட்டேன். நான் நடித்த படங்கள், குடும்பம் தவிர வேறு எதை பற்றியும் சிந்திப்பது இல்லை. உண்மையில் எனக்கு பொது அறிவும் குறைவு. “ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தால் மகிழ்ச்சி. சில உறவுகளை வீட்டோடு வைத்துக்கொள்ள வேண்டும். ரஜினி சார் மக்களுடையை மனிதர். அவரைப் பற்றி பொது இடத்தில் பேசும்போது சார் என்றால் தான் கவுரவமாக இருக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அவர் முதல்வரா னால் எனக்கும் மகிழ்ச்சிதான்,” என்கிறார் தனுஷ்.