நிவின பாலிக்கு ஜோடியான அமலா

சத்தமில்லாமல் புதுப் படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார் அமலா பால். தற்போது அவர் பெரிதும் எதிர்பார்த்திருப்பது தனு‌ஷுடன் நடித்துள்ள ‘வேலையில்லா பட்டதாரி-2’, அரவிந்த் சாமியுடன் நடித்துள்ள ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களைத் தான். இந்நிலையில் நிவின் பாலியுடன் மலையாளப் படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் அமலா. ‘காயாம்குளம் கொச்சுன்னி’ என்ற தலைப்பில் உருவாகி வரும் அப்படத்தை ரோஷன் ஆன்ட்ரூஸ் இயக்குகிறார். கடந்த 2015ஆம் ஆண்டு நிவின் பாலியுடன் ‘மிலி’ என்ற படத்தில் நடித்திருந்தார் அமலா. தற்போது மீண்டும் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார். இப்புதிய படத்தில் ராபின் ஹுட் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம் நிவின். கதைப்படி, அமலா பாலுக்கு அவரது காதலி வேடம். “மலையாளத்தில் எப்போதுமே வித்தியாசமான கதைக்களத்துடன் கூடிய படங்களுக்கு ரசிகர்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும். அந்த வகையில் நிவின் பாலி நடிக்கும் படத்தின் கதை ரசிகர்களை நிச்சயம் கவரும். இது சண்டைக் காட்சிகள் நிறைந்த யதார்த்தமான படைப்பாக உருவாகி வருகிறது. இதில் நானும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி தருகிறது,” என்கிறார் அமலா பால்.

Loading...
Load next